வவுனியாவில் வெடுக்குநாரி மலை சிவலிங்க அழிப்புக்கு எதிரான கண்டனப் பேரணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிரான கண்டனப் பேரணியானது வவுனியா கந்தசாமி கோயிலிலிருந்து வவுனியா மாவட்டச் செயலகம் வரையில் இடம்பெற்றது.

நேற்று (மார்ச் 30) காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் பேரணியில் வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள், சைவ சமயத் தலைவர்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதியிடம் சேர்ப்பதற்கான பேரணியின் பிரகடனம் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேரணியில் கலந்துகொண்டவர்கள் அழிக்கப்பட்ட ஆலயத்தைப் பார்வையிட்டதோடு இறை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

Share this Article