வேப்பங்குளத்தில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 15) மாலை இடம்பெற்றது.

வவுனியாவில் இருவேறு பிரபல பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் கடந்த சில நாட்களாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரு மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் மாணவன் ஒருவரின் பெற்றோர் தலையிட்டு சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியிலுள்ள மாணவனின் வீட்டுக்குள் புகுந்த மற்றைய மாணவன் உள்ளிட்ட குழுவினர் குறித்த வீட்டில் வசித்த மாணவன் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனால் காயமடைந்த 16 வயது மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article