வவுனியாவில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம், மூவர் கைது

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியா, பண்டாரிக்குளத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (ஜூன் 29) இரவு 11 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் நடந்துள்ளது. ஜீப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தபோது அவர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு வரவில்லை என்று தெரிவிக்கும் அந்தப் பகுதி மக்கள், விசேட அதிரடிப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மூவரைக் கைது செய்தனர் என்று தெரிவித்தனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஜீப் கைப்பற்றப்பட்டதுடன், இரு வாள்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article