வவுனியாவில் நடந்த மிகப் பிரமாண்டமான இளைஞர் மாநாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு இளைஞர் முன்னெடுப்பு அமைப்பின் ஒழுங்கமைப்பில் இனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான நம்பிக்கை மற்றும் ஐக்கியத்தினை கட்டியெழுப்புவதற்கான இளைஞர் முன்மொழிவுகள் தொடர்பான மிகப் பிரமாண்டமான இளைஞர் மாநாடு அதன் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் வவுனியா நகரசபையின் நகர மண்டபத்தில் சிறப்பான முறையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வானது 300 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளோடு வவுனியா மன்னார் முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகளோடு வன்னி தேர்தல் தொகுதிக்கான இளைஞர் மாநாடாகவும் எதிர்காலத்தில் இளைஞர்களுடைய செயற்பாடுகள் இந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்களோடு இந்த மாநாடு ஒழுங்குபடுத்தப்பட்டது.

இவ் இளைஞர் மாநாட்டில் அரசியல் கட்சிகளினுடைய பிரதிநிதிகளும், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அதன் பிரதிநிதி ,ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர் யுவதிகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Share this Article