வவுனியால் கை,கால் வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கை,கால்கள் வெட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, தரணிக்குளம், குறிசுட்டகுளம் பகுதியிலிருந்து நேற்று (நவம்பர் 14)மாலை இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

தரணிக்குளம் குறிசுட்டகுளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article