வயல் காவலுக்குச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று புளியங்குளம், புதூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை(ஏப்ரல் 15) இரவு புளியங்குளம், புதூர் பகுதியிலுள்ள தனது வயல் காவலுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை விடிந்தும் குறித்த இளைஞர் வீடு திரும்பாமையால் அவரது குடும்பத்தினர் குறித்த இளைஞரைத் தேடிச்சென்ற போது வயற் பகுதியில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜெகநாதன் கேஜிதன் என்பவராவார். குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article