வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் குருதிக் கொடை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட இரத்ததான முகாம் இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், வைத்திய அதிகாரி (மாஞ்சோலை) சுகாதாரப் பிரிவினர், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள்,அங்கு கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உதிரக் கொடையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article