வங்கிக் கடன் வட்டிகள் குறைவடையும் சாத்தியம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வங்கிகளுக்கான முதன்மை வட்டி வீதங்கள் 71 அடிப்படைப் புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

டெய்லிமிரர் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த வாரம் வங்கிகளின் முதன்மை வட்டிவீதம் 22.74% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த முதன்மை வட்டிவீதத்தை அடிப்படையாக கொண்டே வங்கிகள் வெவ்வேறு வகையான கடன்கள், கடன் அட்டைகள், அடைவு போன்றவற்றுக்கான வட்டிவீதங்களைத் தீர்மானிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கி இம்மாத ஆரம்பத்தில் துணை நில் வைப்பு வட்டி வீதங்களை 100 அடிப்படைப்புள்ளிகளால் அதிகரித்திருந்த போதும், சந்தை மனநிலைமைக்கு அமைய வங்கிகளின் முதன்மை கடன் வட்டி வீதம் குறைவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நிதி ஆய்வாளர்களின் தகவல்படி இவ்வருட இறுதிக்குள் வட்டி வீதங்கள் 12-15% ஆக குறைவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று நம்பப்படுகிறது.

Share this Article