யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன் வீதியில் மரநடுகை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் மாநகர சபை,  மற்றும் Green Layer  சுற்றுச்சூழல் அமைப்பு என்பன ஒன்றாக இணைந்து வைத்தியசாலை முன்புறமாககாணப்படுகின்ற வீதியின் நடுப்பகுதியில் இன்றையதினம் (மே 16) நிழல்தரும் மரங்கள் நாட்டியுள்ளன.

வைத்தியசாலை வீதியானது பொது மக்களின் அதிகரித்த பாவனையில் உள்ளசன நெரிசலான பகுதி என்பதுடன் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள்வீதியின் ஊடாக நடந்தும் ஏனைய வாகன வசதியினூடாக பயணிக்கின்றார்கள். ஆகவே இப்பகுதி கடுமையான வெயில், வெப்பம் மற்றும் புறக் காரணிகளால்அவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகின்றது எனவே பாதுகாப்பாக உயர்ந்துவளரக்கூடிய நிழல் மரங்கள் நடப்பட்டன 

இச் செயற்பாட்டினை சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலரும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article