யாழ் – மானிப்பாய் வீதியில் முச்சக்கரவண்டி – பட்டா வாகனம் விபத்து!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை(23) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முச்சக்கர வண்டி ஒன்று பட்டாரகவாகனத்துடன் விபத்துக்குள்ளாகி முற்றாக சேதமடைந்ததோடு முச்சக்கர வண்டிசாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் –  காரைநகர் பிரதான வீதியில்  அமைந்துள்ளஅரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்கதொடங்கிய நிலையில் பின்புறமாக ஆறுகால்மடம் பகுதியில் இருந்து வருகைதந்த பட்டாரக வாகனம் மோதியது.

இதன் போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்ததுடன் முச்சக்கர வண்டிசாரதி ஆறுகால்மடம் பகுதியினை சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும்இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை பட்டாரக வாகனம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமானமின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதிகாயங்களின்றி மீட்கபட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்  போக்குவரத்து பொலிசார் மேலதிகவிசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Share this Article