யாழ். ஆயரையும் விகாராதிபதியையும் சந்தித்த மைத்திரிபால!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். ஆயர் மற்றும் ஸ்ரீ நாக விகாராதிபதியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று(ஜூன் 29) காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்ற மைத்திரிபால வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article