யாழில் பகுப்பாய்வு செய்யப்படவுள்ள கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது என்று சட்ட மருத்துவ அதிகாரி வாசுதேவ நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இதுவரை நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களின் வயது மற்றும் பாலினம் தொடர்பில் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிக ளில் யாழ்ப்பாணத்தில் பகுப்பாய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேசமயம், திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் புதைகுழியின் அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின்போது அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share this Article