யாழில் நடந்த கதம்ப விழாவில் பசுவூர்க்கோபிக்கு விருது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மண்ணின் மைந்தன் புலம்பெயர்ந்து நெதர்லாந்து நாட்டில் வாழும் கவிஞரும் பாடலாசிரியருமான ஐயாக்குட்டி கோவிந்தநாதன் (பசுவூர்க்கோபி) அவர்களுக்கு கவிதைக்கான சிறப்பு விருதாக “கலாமித்திரா” விருது அண்மையில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது

வடக்கு மற்றும் கிழக்கிற்கான “இலங்கை பார்வையற்றோர் அறக்கட்டளை நிலையமும்” தேசிய ரீதியில் இயங்கிவரும் கண்ணகி கலாலயம், கலை, கலாச்சார, சமூக சேவை கலைஞர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச அன்னையர், தந்தையர் குடும்ப தின பெற்றோர் கௌரவிப்பும் விழிப்புணர்வு கதம்ப விழா நிகழ்வும் – 2026 க்கான வைபவம் அண்மையில் (05/06) யாழ்ப்பாண கல்லூரி இளங்கலை மண்டபத்தில்  நடைபெற்ற போதே இவ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

புலம்பெயர்ந்தாலும் மண்வாசனை மாறாத கவிதைகளும் சமுதாய சிந்தனையுள்ள கவிதைகளும் தொடர்ந்து எழுதிவருகின்றதோடு “வெண்பனித்தூறல்”என்னும் கவிதைநூலை வெளியிட்டும் உள்ளதுடன் வாலி அறக்கட்டளை விருது , நெதர்லாந்து வலையொளித்தள விருது, கண்ணதாசன் விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளமை சிறப்பாகும்.

Share this Article
Leave a comment