நெடுந்தீவு பிரதேச சபையின் உள்ளக விளையாட்டு அரங்க செயற்பாடுகள் இன்று ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச சபையின் உள்ளக விளையாட்டு அரங்கமானது இன்றைய தினம் (10/07) பிரதேச சபையின் உப தவிசாளர் ச.செபஸ்ரியான் விமலதாஸ் அவர்களினால் இனிதே திறந்து வைக்கப்பட்டது .

மணல் கடற்கரையின் அருகில் உள்ள பிரதேச சபையின் தங்குவிடுதி வளாகத்திலேயே உள்ளக விளையாட்டரங்கு அமைந்துள்ளது.
இவ் உள்ளக விளையாட்டு அரங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாகவும் நெடுந்தீவுச் சுற்றுலாவிகள் பொழுது போக்கும் இடமாக இது அமைய வேண்டும் என்பதேயாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை இவ் உள்ளக விளையாட்டுகளை விளையாட விரும்புவோர் மணித்தியாலய அடிப்படையிலோ அல்லது மாதாந்த அடிப்படையிலோ சந்தாப்பணம் செலுத்தி உறுப்பினராக இணைந்துகொண்டு விளையாட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விழாவில் பிரதேச சபை செயலாளர், உப தவிசாளர் மற்றும் ஏனைய சபை உறுப்பினர்கள் , நெடுந்தீவு கோட்டப் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், சனசமுக நிலைய உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article
Leave a comment