க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் றோ.க.மகளிர் கல்லூரி முன்னிலை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  வெளியிடப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி 83% மாணவிகள் சித்தியடைந்து நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகளின்படி 83% சித்திபெற்றுள்ளதுடன் கல்லூரியின் சிறந்த முதல் மூன்று பெறுபேறாக 6A  C  2S இனை செல்வி சகாய டொனேஸ் மேரி டீனுஜா , செல்வி S.மேரிசானு – 3A   2B    3C  S செல்வி  K.கிருதர்ஷினி – 3A   B    2C  3S ஆகியோர் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் பெறுபேறுகளின்படி 68% சித்திபெற்றுள்ளதுடன் சிறந்த  பெறுபேறாக 3A 2B 2C  2S இனை செல்வன் தோமஸ் அமலமெதுன்   பெற்று  பெருமை சேர்த்துள்ளார்.

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்கள் பரீட்சையின் பெறுபேறுகளின்படி 50% சித்திபெற்றுள்ளதுடன் கல்லூரியின் சிறந்த பெறுபேறாக 3A  B   2C   3S  இனை  செல்வி ரட்சகா சயந்தன் பெற்று  பெருமை சேர்த்துள்ளார்.

Share this Article
Leave a comment