மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து!- நால்வர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி A-9 பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (ஏப்ரல் 20) பதிவாகியுள்ளது.

இந்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

கிளிநொச்சி நகரிலிருந்து முறிகண்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் ஐவர் பயணித்த நிலையில் நால்வர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Article