மென்போர்ட் சர்வதேசப் பாடசாலை அல்லைப்பிட்டியில் திறப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அல்லைப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள மென்போர்ட் சர்வதேசப் பாடசாலை திறப்பு விழா நேற்று  31 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் மரியப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் பிரதம விருந்தினராக நிகழ்வில் கலந்து பாடசாலைக் கட்டடத்தை ஆசீர்வதிக்க இத்தாலி உரோமபுரியிலிருந்து வந்த புனித கபிரியேலின் மென்போர்ட் அருட்சகோதரர்கள் துறவறசபை மேலாளர் அருட்சகோதரர் யோன் கல்லறக்கல் நாடாவை வெட்டி பாடசாலையைத் திறந்தார்.

இந்த நிகழ்வில் இந்தியா நாட்டு திருச்சிமாகாண முதல்வர் அருட்சகோதரர் இருதயம், ஏனைய மாகாண முதல்வர்களும் மற்றும் யாழ். மாவட்டச் செயலர், அரசியல் பிரமுகர்கள், வலயக்கல்வி உத்தியோகத்தர்கள், கடற்படை அதிகாரிகள் குருக்கள், துறவிகளென பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article