முல்லைத்தீவு மாவட்டத்தில் இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் மாவட்ட செயலாளர் க.விமலநாதனால் நேற்றைய தினம் (மார்ச் 26) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு எஸ்.ஜெயகாந்த் தலமைதாங்கினார்.

ஜானாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் வேலைத்திடட்டமாக இது அமைந்திருந்தது.

ஏற்கனவே பெரும்போக அறுவடையில் பிரதேச செயலகங்களால் கொள்வனவு செய்யப்பட்ட அரிசியே இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

உடையார்கட்டு தெற்கு பிரதேச சமுர்த்தி, பொருளாதார உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மாவட்ட பொறியியலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கணக்காளர், பிரதேச செயலக அபிவிருத்தி, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article