முல்லைத்தீவு அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஆராய்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று (ஓகஸ்ட் 3) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.00 மணிக்கு நிறைவடைந்தது.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கௌரவ இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் விவசாயம் ,காணி, மகாவலி அதிகாரசபை, வனவளத் திணைக்களம் ,முல்லைத்தீவு பஸ் நிலையம், நன்னீர் மீன்பிடி, கடற்தொழில் மற்றும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் முதன்மையாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. சாள்ஸ் நிர்மலநாதன், திரு.கு.திலீபன், திரு.செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண பிரதம செயலாளர் திரு சமன் பந்துளசேன, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி) வடமாகாண திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள்,முல்லைத்தீவு உதவிபொலிஸ் அத்தியட்சகர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article