முல்லைத்தீவில் வீட்டுக் காணியிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீட்டுக் காணியிலிருந்து எறிகணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டுக்காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்தபோது, காணியில் மோட்டார் செல் இருந்துள்ளதை கண்டுள்ளார்.

இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு வீட்டுக்காணியின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் நீதிமன்ற அனுமதியோடு விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் காணியில் இருந்த மோட்டார் எறிகணையை நேறறு (ஒக்ரோபர் 14) செயலிழக்கச் செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article