முன்மாதிரிக் கிராம செயற்திட்டக் கூட்டம் வேலணையில்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (பெப்ரவரி 20) உதவி பிரதேச செயலாளரின் தலைமையில் SOND நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற முன்மாதிரி கிராம செயற்திட்டக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தொடர்பான விளக்கத்தை SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்துராசா வழங்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாதாந்தம் 5 கிராம சேவகர் பிரிவுகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி மீளாய்வு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

Share this Article