மின்விநியோகம் சீராக புதிய இயந்திரம் இன்றையதினம் நெடுந்தீவுக்கு!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச மின்சார வழங்கலை சீராக்கும் வகையில் மின் இயந்திரம் ஒன்று இன்றையதினம் (மே18) நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சுமார் 400 கிலோவாட்ஸ் வலுவுடைய  இயந்திரம் ஒன்றே மின்சார சபையினரின் உதவியுடன் கடற்படைகலம் மூலம் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு மின்சார நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் குறிகாட்டுவானில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மின் இயந்திரம் ஒன்றை இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்ததுடன் அதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article