மின்கட்டணம் உயர்வு – மின்மானி வாசிப்பாளர் மீது கடும் தாக்குதல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வீட்டு மின்கட்டணம் உயர்ந்ததை அடுத்து, வீட்டுக்கு வந்த மின்மானி வாசிப்பாளரைக் கட்டையைக் கொண்டு தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மின் கட்டணங்கள் உயர்ந்துள்ளதை அடுத்து, வீடுகளுக்கான மாதாந்த மின் கட்டணமும் சடுதியாக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், சிலாபம் மின் பொறியியலாளர் பிரிவில் கடமையாற்றும் மின்மானி வாசிப்பாளர் ஒருவர், மாதந்த மின்மானி வாசிப்புக்காக புத்தளம் – மஹகும்புக்கடவலவில் உள்ள வீடொன்றுக்குச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்தவர் வீட்டு மின்கட்டணம் வெகுவாக அதிரித்துள்ளது என்று தெரிவித்து மின்மானி வாசிப்பாளர் மீது கட்டையைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த மின்மானி வாசிப்பாளர் சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Article