நெடுந்தீவு மக்களின் உள்ளூர்ப் போக்குவரத்து தேவைக்கென கொண்டுவரப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அனாதரவாக மாவிலித் துறைமுகத்தில் விடப்பட்டுள்ளது.
உள்ளூர் போக்குவரத்துக்கென ஏற்கனவே சேவையில் இருந்த பேரூந்து விபத்துக்குள்ளாகி பழுதடைந்த காரணத்தால் அதற்கு பதிலாக பாவனையிலிருந்த பேருந்து ஒன்று யாழ் நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட போதும் வீதி திருத்த பணிகள் இடம்பெற்று வருவதால் தற்போது இதனை பயணிகள் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலையில் இருப்பதால் பேருந்து வந்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் மாவலித் துறைமுகப் பகுதியிலேயே வெயில், மழை, கடல் காற்று என்பனவற்றின் தாக்கங்களுக்கு உள்ளாகும் வகையில் அனாதரவாக விடப்பட்டுள்ளது.
வீதி திருத்தப் பணிகள் முடிவடைந்து பயணிகள் போக்குவரத்துச் சேவைக்காக இந்தப் பேருந்தினை இயக்க முற்படும்போது இது சேவைக்கு பொருத்தமானதாக அமையுமா என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாக உள்ளது.
எனவே இதனை பாதுகாப்பான இடத்தில் தரித்து நிறுத்துவதற்கு உரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என நெடுந்தீவு மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.