இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அதிவந்தனைக்குரிய நெடுந்தீவு மண்ணின் மைந்தன் மறைந்த ஆயர் இராயப்புஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே நடாத்தப்படவுள்ள கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளுக்கான தலைப்புக்கள் வெளியிடப்படுகின்றது.

போட்டிக்கான விண்ணப்பங்கள் மற்றும் போட்டி விதிமுறைகள் நெடுந்தீவு கோட்டத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் (08) மாதம் 08,09,10 ஆகிய திகதிகளில் சகல பிரிவுகளுக்குமான குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

போட்டிக்கான தலைப்புகளும் , பங்குபற்றும் தரங்களும்.

01. நெடுந்தீவு மண்ணில் மலர்ந்த ஆயர் இராஜயப்பு ஜோசப் ஆண்டகை ( தரம் 5 – 7)

02. ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை நமக்கெல்லாம் முன்னுதாரணமானார்  (தரம் 8- 9)

03. நெடுந்தீவின் முத்துக்களில் ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையும் பெருமைசேர்த்தார் (தரம் 10 -11)

04. அருட்கலாநிதி  ஆயர்  இராஜப்பு  ஜோசப்  ஆண்டகையின் தமிழ் பணிக்காய்தலைவணங்கும்  நல்லுலகம் (தரம் 12 -13)

Share this Article