வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்ததான முகாமை இன்று (மே 17) காலை 08.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர்,  உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம அலுவலர் நிர்வாகம், வைத்திய அதிகாரி, சுகாதாரப் பிரிவினர், அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், அங்கு கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் உதிரக்கொடையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Share this Article