நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால்(JSAC) ஏற்பாடு செய்யப்பட்டகௌரவிப்பு நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச சபைக்கு நேரடியாக மக்களால் செய்யப்பட்ட திருமதி.மெற்றில்டா பாமினி ஜோர்ஸ் அமலதாசன்கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில்  நேரடியாக வெற்றிபெற்ற பெண் உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு குறித்த நிறுவனத்தால் இன்றையதினம் (ஜூன் 22) முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் நெடுந்தீவு பிரதேசசபைக்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின்சார்பில் போட்டியிட்டு மக்களின் வாக்களிப்பு மூலம் நேரடியாக தெரிவாகியதிருமதி.மெற்றில்டா பாமினி ஜோர்ஸ் அமலதாசன் அவர்களுக்கு கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேசசபைக்கு போட்டியட்டு நேரடியாக வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரேயொரு பெண் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article