மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று, நேற்று வியாழக்கிழமை (செப்ரெம்பர் 7) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மாங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

மாங்குளம் நீதிபுரம் பகுதியை சேர்ந்த இருவரும் விறகு சேகரிப்பதற்காக சென்றிருந்த போதே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த சம்பவத்தில் 7 வயது பார்த்தீபன் நிதர்சன் என்ற சிறுவன் மற்றும் 84 வயதுடைய மாரிமுத்து மணியம் ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article