மரண வீட்டுக்குச் சென்ற சகோதரர்கள் சடலமாக மீட்கப்பட்ட அவலம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (ஏப்ரல் 26) மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற மரணவீட்டில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இருந்து சென்றவர்களே உயிரிழந்துள்ளனர்.

மரண வீட்டுக்குச் சென்று விட்டு இன்று பகல் வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்ற போது ரவிச்சந்திரன் சுரேஸ் என்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார். இதன்போது மூழ்கிய தம்பியைக் காப்பாற்ற சென்ற 27 வயதுடைய ரவிச்சந்திரன் சுமன் என்ற சகோதரனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இருவரது உடல்களும் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இருவரது உடலங்களையும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் வருகை தந்து பார்வையிட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article