மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் மாவட்டத்தில் பல வருடங்களாக சிறப்பாக இயங்கி வரும் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 29) இடம்பெற்றது.

இதில் புதிய தலைவராக  வி.எஸ்.சிவகரன் மற்றும்  செயலாளராக  தோமஸ் மரியதாஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தமிழ்மொழி வளர்ச்சியில் தசாப்த காலத்திற்கும் மேலாக சேவையாற்றி வரும் மன்னார் தமிழ்ச் சங்கத்தில் ஆர்வமுடையவர்கள் இணைந்து பணியாற்ற முன் வருமாறு மன்னார் தமிழ் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பழைய தலைவரான சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் சிறப்பாக கடமையாற்றியிருந்தார்.
Share this Article