மன்னாரில் நடந்த விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் உயிலங்குளம் நொச்சிக்குளம் பிரதான வீதியில் இன்று(ஜூலை 4) மதியம் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கப் ரக வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

நொச்சிக்குளம் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த செபமாலை சிறிதரன் என்ற 55 வயதுடையவரே உயிரிழந்தவராவார். இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article