மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக முரளிதரன் நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி முரளிதரன் நியமனம் பெற்றுள்ளார்.

குறித்த நியமனமானது இன்று (டிசம்பர் 14) பிரதமர் தினேஷ் குணவர்த்தவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட தரத்தையுடைய ஒரு நிர்வாக அதிகாரியான இவர் கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்திருந்ததோடு இறுதியாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

Share this Article