மக்கள் பாதுகாப்பு கருதி குமுதினிப்படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளிக்காற்றுக் காரணமாக மக்கள் பாதுகாப்புக் கருதி குமுதினிபடகுச் சேவை இடைநிறுத்தபட்டுள்ளது. கடற்கொந்தளிப்பு மற்றும் காற்று வீசும் வேகம் அதிகமாக காணப்படுவதால் இன்றைய தினம் போக்குவரத்துசேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் நாளை முதல் எதிர்வரும் நாட்களில் காலநிலை மாற்றங்களை கவனத்திற் கொண்டு குமுதினிப்படகுச் சேவை இடம் பெறும் எனத்தெரிவிக்கப்படுகின்றது. குமுதினிப்படகுச் சேவையானது மக்களுக்கு நீண்டநாட்கள் பாவனையில் இருப்பதுடன் அதனை சரியான முறையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவைப்பாடும் காணப்படுகின்றது.

மூன்று சேவைகளை குமுதினி வழங்கிவருவதுடன் கடும் காற்றுக் காலங்களில் குமுதினிப்படகுச் சேவை இடம் பெறும் சமயத்தில் குமுதினிப்படகு மிகவிரைவாக பழுதடைகின்ற சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share this Article