மகனின் மரணச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் ஒன்று கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று முன்தினம்( மார்ச் 2)உயிரிழந்துள்ளார்.

இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த மரண செய்தியை நேற்று ( மார்ச் 3) அறிந்த அவரின் தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.

Share this Article