போராட்டத்தில் இருந்து பின்வாங்கியது இலங்கை வங்கி ஊழியர் சங்கம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்த முறை முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களையோ அல்லது கடுமையான தொழில்சார் நடவடிக்கைகளையோ நடைமுறைப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என அதன் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுடன் பொருளாதார திட்டத்தில் உள்ளதால், அதில் தலையிடும் எந்தவொரு நடவடிக்கைக்கும் உடன்பட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான மையமாகக் கருதப்படும் இலங்கை வங்கி இந்தத் தருணத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

Share this Article