போதை தலைக்கேறி நண்பனை அடித்துக் கொன்ற ஆசாமி! – வவுனியாவில் கொடூரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(ஜூலை 9) இரவு நடந்துள்ளது. வவுனியா, கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுச்சாமி நிசாந்தன் என்ற 32 வயது நபரே உயிரிழந்துள்ளார்.

நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்தியபோது, போதை தலைக்கேறி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என்றும், அதன்தொடர்ச்சியாக மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article