பொலிஸ் காவலில் உயிரிழப்புக்களை தடுக்க புதிய வழிகாட்டுதல்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையாளர் நிமல்புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இந்த ஆண்டில் இதுவரை 20 இற்கும் மேற்பட்டோர்பொலிஸ் காவலில் இறந்தனர். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு டிசெம்பர் 11ஆம் திகதி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என நிமல் புஞ்சிஹேவாகூறினார்.
Share this Article