பொலிஸ் உத்தியோகத்தரின் கையை கடித்து விட்டு அம்பியூலன்ஸ் சாரதி தப்பியோட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மன்னார் பிரிவு குற்றத் தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சாரதி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக மன்னார் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து முருங்கன் வைத்தியசாலை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரைக் கைது செய்ய முற்பட்டபோதே அவர் இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தரின் கையைக் கடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் முருங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அம்பியூலன்ஸ் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

Share this Article