பொறுப்பற்ற மக்களது செயற்பாடு பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரசாங்கம் கடந்த சில வாரங்களாக பயனத்தடையினை அமுல் செய்து இன்றைய தினத்தில் பல இறுக்கமான கட்டுப்பாடுகள் விதித்து அதனை தளர்த்தியது

ஆயினும் பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாது பாதூப்பற்ற முறையில் பலரும் நடமாடியதை காணமுடிந்தது.

பல இடங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த போதும் நெடுந்தீவு பிரதேசம் பாதுகாப்பனதாக காணப்பட்டது அதனை தொடர்சியாக பேணுவதற்கு மக்கள் தொடர்ந்தும் கொரோனா பாதுகாப்புக்களை பேணுதல் வேண்டும்


இன்றைய தினம் (ஜீன் 21) பயனத்தடை நீக்கப்பட்டதும் அளவுக்கதிகமானவர்கள் நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து யாழ் நகர் வந்து மீளவும் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

சரியான விதத்தில் முகக்வசம் அணிந்திராமை சமுக இடைவெளி பேணாமை போன்ற செயற்பாடுகளை காணமுடிந்தது.


நெடுந்தீவிற்குள் கொரோன உள் நுழையாதவாறு பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமையுமேயாகும் எனவே தீவக மக்கள் இவ்விடயத்தில் விழிப்புடன் செயற்படுவது நன்று

Share this Article