பொன்னாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து காரைநகர் பொன்னாலைப் பாலத்தினுள் பாய்ந்து இன்று (ஏப்ரல் 16) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் ஒருவர் மட்டுமே பயணித்ததாகவும் அவருக்கு எந்தவித காயங்களும் இன்றி மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சாரதி மதுபோதையில் இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர். குறித்த நபர் தென்னிலங்கையைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் காரைநகர் கசூரினா சுற்றுலாத்தளத்திற்கு வருகை தந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article