பொதுக் கிணற்றில் இருந்து 11 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காரைநகர், இலகடி பகுதியில் 11 வயதுச் சிறுவன் ஒருவரின் உடல் பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த பரமநாதன் தக்சயன் என்ற 11 வயதுச் சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவன் சென்ற சைக்கிள் கிணற்றுக்கு அண்மையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. குளிக்கச் சென்றபோது தவறி கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சிறுவனின் உடல் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னரே சிறுவனின் உடல் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Share this Article