பெரியதம்பனைக் கிராமத்தில் யானைகள் அட்டகாசம்!- மக்கள் விசனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா – பெரியதம்பனைக் கிராமத்தில் யானைகளின் அட்டகாசத்தால் கிராமத்தில் உள்ள பல பயன்தரும் மரங்கள் நாளாந்தம் நாசமாகிக்கொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை.

இதேவேளை அரசினால் இக் கிராமத்திற்கு யானை பாதுகாப்பு வேலி அமைக்க அனுமதியளிக்கப்பட்டு அதற்குரிய பொருட்கள் வனஜீவராசிகள் அலுவலகத்தில் இரண்டு வருடங்களாக இறக்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் அதற்குரிய ஆயத்த வேலைகள்கூட செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.

பெரிதம்பனைக் கிராமத்தில் உள்ள பயன்தரும் மரங்கள் யானைகளால் அழிக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே காரணமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Share this Article