பூமணி அம்மா அறக்கட்டளையால் வறிய நிலை இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் விசுவாசம்செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில், அறக்கட்டளையின் இரு உறுப்பினர்களின் பிறந்த நாள் ஞாபகார்த்தமாக யாழ்ப்பாண பகுதியில் வசிக்கும்தினமும் கூலி வேலை செய்யும் வறிய நிலை குடும்பங்களில் உள்ள இரண்டுமாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்து,அதிக தூரம் கால் நடையாகதினமும் பாடசாலைக்கு நடந்து செல்வதாகவும் அதன் காரணமாக துவிச்சக்கரவண்டிகள் வழங்கி உதவும்படியும் அறக்கட்டளையிடம் விடுத்த கோரிக்கைக்குஅமைவாக பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளானஅறக்கட்டளையின் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், ஆலோசகர்இ.மயில்வாகன ஆகியோரால் யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள பூமணி அம்மாஅறக்கட்டளையின் தலைமைச் செயலகத்தில் வைத்து இன்று வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article