பூப்புனித நீராட்டு விழாவில் போதையில் மோதல் – 7 பேர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காரைநகர் களபூமி, ஊரிப்பகுதியில் பூப்புனித நீராட்டு விழா ஒன்றில் மதுபோதையில் குழு மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 பேரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் நேற்றுமுன்தினம் (மார்ச் 10) உத்தரவிட்டார்.

பூப்புனித நீராட்டு விழா ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி மோதலில் முடிந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் கண்ணில் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொருவருக்கும் எதிராக இருதரப்பும் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்த நிலையில், இரு தரப்பில் இருந்தும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

Share this Article