புத்தாண்டை முன்னிட்டு மன்னாரில் மாட்டு வண்டி சவாரி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
புத்தாண்டை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (ஏப்ரல் 15) மாலை மன்னார் பரப்பாங்கண்டல் இரட்டை மாட்டு வண்டி திடலில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஜோடி காளைகள் குறித்த போட்டியில் கலந்து கொண்டிருந்தன. போட்டியானது A,B,C,D,E ஆகிய 5 பிரிவுகளில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
Share this Article