புதுக்குடியிருப்பு கோம்பாவிலில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நேற்றிரவு(செப்ரெம்பர் 30) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கைவேலி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றுக்குள் வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share this Article