புதிய கட்டுப்பாட்டுடன் போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடந்த 13ம் திகதி (மே – 13) நள்ளிரவு விதிக்கப்பட்ட போக்குவரத்து தடை இன்று (மே – 17) காலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது. இன்றைய தினம் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைவாக மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த மூன்று நாட்கள் நெடுந்தீவு கடற்போக்குவரத்து மற்றும் உள்ளுர் போக்குவரத்து என்பன நிறுத்தப்பட்டிருந்தது. ஆயினும் இன்றைய தினம் காலையில் வழமைபோல் 06.10 மணிக்கு குறிகட்டுவான் நெடுந்தீவு பயணிகள் போக்குவரத்து ஆரம்பமாகியது.


தொழில், வைத்தியசாலை போன்றவற்றிற்கு செல்வோர் தவிர்ந்த ஏனையோர் தேசிய அடையாள அட்டையில் ஒற்றை எண் உள்ளவர்கள் (1,3,5,7,9) மாத்திரம் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்

கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து தேசிய அடையாள அட்டைகள் சரி பார்க்கப்பட்டு பயணத்திற்கான அனுமதி வழங்கியதுடன், ஏனைய அடையாள அட்டை இலக்கத்தினை சேர்ந்தவர்கள் பயன அனுமதி மறுக்கப்பட்டது.


அவ்வாறாகவே இன்றைய தினம் யாழ் நகரிலும் நடைமுறைகள் இடம் பெறுவது அவதானிக்க முடிந்தது.

Share this Article