புங்குடுதீவு கிழக்கில் பொங்கல் பொதிகள் கையளிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு கிழக்கில் கடந்த 11ஆம் திகதி சூழகம் அமைப்பால் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.

கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஏற்பாட்டில் கனடா K2B நடன கலையகத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்தப் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.

சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளனின் ஒருங்கிணைப்பில் புங்குடுதீவு 2,10, 11,12ஆம் வட்டாரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன.

Share this Article