பிரதேச வைத்தியசாலைக்கு உபகரணங்கள் அன்பளிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதுமகீர்த்திதிஸ்நாயக தேரோ அவர்களின் ஏற்பாட்டில் கொண்டுவரப்பட்ட மருத்துவ உபகரணங்கள், பொருட்கள், நோயளர் கட்டில்கள், (Modern comfort beds) மற்றும் வீல்செயார் (wheelchair) போன்ற பொருட்கள் இன்றைய தினம் (ஜீன் 18) வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வணக்கத்திற்குரிய விகாராதிபதி, நெடுந்தீவு பிரதேச செயலாளர், வைத்திய அதிகாரி,கடற்படை உத்தியோகத்தர், வைத்தியசாலை ஊழியர் சங்கத்தலைவர் பொலிஸ் பொறுப்பதிகாரி, மகாவித்தியாலய அதிபர், மற்றும் பலர் இந் நிகழ்வில் சுகாதார விதி முறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.

நேற்றைய தினம் நயினாதீவிலும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்களால் வைத்தியசாலைக்கான அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் உபகரணங்கள் விகாராதிபதி அவர்களது ஏற்பாட்டில் சிங்கப்பூர் மகா கருண புத்தசாசன அமைப்பினரால. அன்பளிப்பு செய்யப்பட்டது
Share this Article