யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் (பெப்ரவாி 01) நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் குழுக்களின் பிரதித்தலைவருமான யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினா் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவா்கள் தலமையில் பிரதேச செயலக கேட்போா் கூடத்தில் இடம் பெற்றது.
இப்பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினா்களான சிவஞானம் சிறிதரன், செல்வராசா கஜேந்திரன் பொன்ம்மலம் கஜேந்திரகுமாா் ஆகியோரும் மேலதிக அரசாங்க அதிபா், பிரதேச சபை தலைவா் முப்படைகளின் தளபதிகள், திணைக்களங்களங்களின் தலைவா் என பலரும் கொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு நடாத்தப்பட்டது.
நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பின்வரும் தீா்மானங்களிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
நெடுந்தீவிற்காக பாரிய சேவையை ஆற்றி அமரத்துவம் அடைந்த வைத்தியர் குமாரசாமி பாலச்சந்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் முன்மொழிந்தமைக்கு அமைய ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனால் வழிமொழியப்பட்டு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுககூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது
முப்பது வருடஙக்ளுக்கு மேல் திருத்தபடாது காணப்படுகின்ற பிரதான வீதியில் முதற்கட்டமாக 4கீலோமீற்றர் வீதி புனரமைக்கும் பணியை இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்குமாறும்மாறும் உப ஒப்பந்தகாரர்களிடம் கையளிக்காது பெரிய வீதிகளை சிறப்பான முறையில் அமைக்கும் ஒப்பந்தகாரர்களிடம் கையளிக்குமாறும் வடிகால் அமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் அங்கஜன் இராமநாதன் உரிய தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெடுந்தீவுப் பிரதேசத்தில் காணப்படும் பேருந்து அடிக்கடி பழுதடைவதால் மக்கள் போக்குவரத்து பாதிப்படைவதாக தொிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு பேருந்துகள் வழங்குவது தொடா்பாக நாளைய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றுவதாக தொிவிக்கப்பட்டது,
வடதாரகையின் திருத்துமான வேலைகள் முடிவடையும் வரையும் அதன் ஏரிபொருளினை நெடுந்தாரகைக்கு வழங்குமாறு பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாளைய மாவட்ட கூட்டத்தொடரில் உரிய தரப்பினருக்கு பரிந்துரை செய்ய தீர்மானிக்கப்ட்டுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்கள் ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நிபுணத்துவம் வாய்ந்த தொழில்நுட்பம் சார்ந்தவர்கள் கொண்ட குழுவை அமைத்து நெடுந்தீவிற்கான கடல் போக்குவரத்திற்காக நிரந்தர படகுகளை அமர்த்துமாறு கேட்டுக்கொண்டதிற்கிணங்க இதற்கான குழுவை நியமனம் செய்ய நாளைய கூட்டத்தொடரில் ஆராயப்படும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
துறைமுகத்தில் மூழ்கிப்போயுள்ள படகுகளால் மக்களும் கடற்தொழிலாளா்களும் அசௌகாியங்களை எதிா்கொள்வதால், கடற்படையின் உதவியுடன் அவற்றை அப்புறப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரும்பாக உத்தியோகத்தர் வருகை தருவதில்லை என பிரதேச விவசாயிகளால் கூறப்பட்டு ஒரு பெரும்பாக உத்தியோகத்தர் தேவை என விவசாயிகளின் வேண்டுகோளிற்கு இணங்க புங்குடுதீவு கமநல சேவை திணைக்களத்தின் பெரும்போக உத்தியோத்தியோத்தரை திங்கள் மற்றும் புதன்கிழமை நெடுந்தீவிற்கு செல்லுமாறு வடமாகாண கமநல சேவை திணைக்களத்தின் பணிப்பாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டு பெரும்பாக உத்தியோகத்தரின் வருகை உறுதிப்படுத்தப்பட்டது.
நெடுந்தீவில் கால்நடை வைத்திய அதிகாரி ஒருவர் நிரந்தரமாக இல்லை என கேட்டுகொள்ளப்பட்டதிற்கிணங்க பெப்ரவரி 15 முதல் கால்நடை வைத்திய அதிகாரி நிரந்தர நியமனம் செய்யப்படுவார் என உரியதரப்பினரால் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேசத்திற்கான சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையை அமைக்கவேண்டும் என நெடுந்தீவு மக்கள் கோரியதிற்கு அமைய யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
வெடியரசன் கோட்டையை புனரமைக்க பௌத்த பிக்கு நிதிவழங்கி புனரமைக்கப்படுவதால் பௌத்த விகாரை அமைக்கப்படுமோ என்ற அச்சம் வெளிப்படுவதால் அந்த வேலைத்திட்டத்தை தொல்பொருள் இராஜாங்க அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாடும் வரை புனரமைப்பு வேலைத்திட்டத்தை நிறுத்துமாறு அங்கஜன் இராமநாதன் தொல்பொருள் திணைக்களத்திற்கு பணிப்பு விடுத்ததுள்ளார்.
நெடுந்தீவு பிரதேசத்தில் ஏற்கனவே 537 ஹெக்டேயர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது அதைவிட 1846.28 ஹெக்டேயர் தேவை என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
அந்த பிரகடனத்தை ஏற்றுகொள்ள முடியாது எனவும் வழங்கப்பட்ட 537 ஹெக்டேயர்களை வைத்து குதிரைகளை பராமரிக்குமாறும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தீர்மானித்துள்ளது